விழுப்புரம், ஆகஸ்ட் 9 –
விழுப்புரம் மாவட்டம் புரட்சி பாரத கட்சி சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய ஆணவ படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவின் விக்னேஷ் அவர்களை ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஆணவ படுகொலைக்கென தனி சட்டம் இயற்றாத தமிழக அரசை கண்டித்தும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் நகராட்சி மைதானத்தில் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் N. தீபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு Gps செல்வராஜ் தெற்கு மாவட்ட அமைப்பாளர், ஜெய்பீம்கமல் தெற்கு மாவட்ட துணை செயலாளர், கிரிவளவன் வடக்கு மாவட்ட துணை செயலாளர்,
ஒரத்தூர் கோபிநாதன் தென்கிழக்கு மாவட்ட பொருளாளர், பெருமாள் மரக்காணம் கிழக்கு ஒன்றிய செயலாளர், சுப்பிரமணி தென்கிழக்கு மாவட்ட துணை செயலாளர், ஜெகன் தெற்கு மாவட்ட பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாக்சர் ஜோதிராஜா தெற்கு மாவட்ட மூர்த்தியார் பேரவை செயலாளர், சார்பு சரவணன் விழுப்புரம் நகர வடக்கு செயலாளர், Xதர்மா விழுப்புரம் தெற்கு நகர செயலாளர், மன்மதன் தெற்கு நகர் அமைப்பாளர், முகிலன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், முருகன் கானை ஒன்றிய செயலாளர், அத்திப்பாக்கம் மாணிக்கம் ஆகியோர்கள் வரவேற்புரை ஆற்றினர்.
புரட்சித் த. தமிழரசன் தெற்கு மாவட்ட செயலாளர், க. கஜேந்திரன் வடக்கு மாவட்ட செயலாளர், த. திருநாவுக்கரசு தென்மேற்கு மாவட்ட செயலாளர், N. மனோ கிழக்கு மாவட்ட செயலாளர், கேப்டன் தியாகராஜன் தென்கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், ரஞ்சித் மேற்கு மாவட்ட பொறுப்பாளர், விஜயந்தாஸ் மைய மாவட்டம் பொறுப்பாளர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பரணிமாரி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் ஜான்சன் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக
கொண்டனர். இதில் க. பூவைஆறுமுகம் மாநில செய்தி தொடர்பாளர் நோக்க உரையாற்றினார் .
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தென்கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், தென்கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் விக்னேஷ் ரமேஷ், வடக்கு மாவட்டம் மூர்த்தியார் பேரவை துணை செயலாளர் மரக்காணம், மேற்கு ஒன்றிய செயலாளர் குமார், மேற்கு துணைச் செயலாளர் ராஜீவ்காந்தி, கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஏழுமலை, மயிலம் ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஸ்ரீபன் விழுப்புரம் நகர இளைஞரணி செயலாளர், வானர் ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கர், கிழக்கு மாவட்ட ஏபிஎல் துணை தெற்கு மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் சர்வின் ராஜ், செயலாளர் அருண் ராஜ், முருகதாஸ், பெருமாள், குமார், பழனி, ஜீவா ஏழுமலை, சுரேஷ், சந்தோஷ், விஷ்வா, குமரன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசு உடனடியாக ஆணவ படுகொலைக்கு சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என்றும் தமிழகத்தில் தொடர்ந்து காவல்துறையால் அரங்கேறும் கொலை மற்றும் பொய் வழக்குகள் விசாரணை என்ற பெயரில் அப்பாவிகளை அழைத்து சென்று லாக்கப் மரணம் செய்து வரும் காவல்துறையை கைது செய்து அவர்களை பண்ணிட்டு இருக்கும் செய்வது மட்டுமல்லாமல் அரசு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆணவக் கொலைகளில் ஈடுபடும் கொலையாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து அவர்கள் வாழ்நாள் வரை சிறதண்டனை அனுபவிக்க அரசு நடவடிக்கை எடுத்தும் இதுபோல் குற்றங்கள் ஏதும் நடக்காமல் தடுப்பதற்கு தமிழக அரசு குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு அவருடைய அரசு வழங்கக்கூடிய அத்தனை சலுகைகளையும் பறித்து அவர்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என்ற சான்று வழங்கிட முன்வர வேண்டும் என்று கோசமிட்டு புரட்சி பாரதத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் இறுதியாக கோலியனூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தினேஷ் நன்றி உரையாற்றினார்.