கன்னியாகுமரி மே 4
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த திலகம் கடந்த மாதம் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் சந்தோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். இவர் தென்தாமரை குளம் செயல் அலுவலராக பதவி வகித்து வருகிறார். தற்போது கூடுதல் பொறுப்பாக அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள செயல் அலுவலர் சந்தோஷ் குமாரை மரியாதை நிமித்தமாக பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ, துணை தலைவர் காந்திராஜ், கவுன்சிலர்கள் ராஜபாண்டியன், வீடியோ குமார், ஜோஷ்திவாகர், தனம் செல்வகுமார், திமுக நிர்வாகி ராஜேந்திரன், சுயம்பு ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து புதிய செயல் அலுவலரிடம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ மற்றும் கவுன்சிலர்கள் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தற்போது நிலவிவரும் கடும் கோடையின் காரணமாக பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விளக்கு மற்றும் சீரான குடிநீர் விநியோகம் செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பொதுமக்கள் நலன் கருதி பேரூராட்சி பணியாளர்கள் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை நடத்தினர்.



