மதுரை, ஜூலை 01 –
மதுரை அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் உபகோயிலான தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் உண்டியல் திறப்பு. திருக்கோவிலின் துணை ஆணையர்/ செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், மதுரை கூடலழகர் பெருமாள் திருக்கோயில் உதவி ஆணையர் பிரதீபா, ஆய்வர் ஜெயலட்சுமி
ஆகியோர் தலைமையில் திருக்கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், மீனாட்சி பிரியாந்த், அறங்காவலர் குழுத் தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், அருணா தேவி, பி.ஆர்.ஓ முருகன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருக்கோவில் பணியாளர்கள் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளை எண்ணத் தொடங்கினர். அந்த வகையில் ரொக்கப் பணமாக ரூபாய் 5,97,862/- மற்றும் தங்கம் 1 கிராம், வெள்ளி 29 கிராம் ஆகியன கிடைக்கப்
பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.