மதுரை, ஆகஸ்ட் 23 –
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியின் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்க வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி, மேன்மைமிக்க ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில் SAGA OF RASHTRAPATI BHAVAN, WINGS TO OUR HOPES ஆகிய புத்தகங்களின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பதிப்புகளை இந்திய திருநாட்டின் ஜனாதிபதி கையொப்பம் இட்டு பள்ளியின் நூலகத்திற்கு அனுப்பி உள்ளதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளிக்கு புத்தகங்களை வழங்கிய மேன்மைமிக்க ஜனாதிபதிக்கு பள்ளியின் தாளாளர் முகமது இதிரிஸ், தலைமையாசிரியர் ஷேக் நபி, உதவித் தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன், அல்ஹாஜ் முகமது மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த பள்ளிக்கு அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபு, எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜன் மற்றும் பல முன்னணி எழுத்தாளர்கள் புத்தகங்கள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



