திருப்பூர், ஜூலை 09 –
திருப்பூர் குமரன் சிலை அருகில் அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பொது வேலை நிறுத்தம் மறியல் போராட்டத்தில் கைது. குமரன் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் செய்த அனைத்து கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
காங்கிரஸ் கட்சியின்யின் ஐ.என்.டி.யு.சி. மாவட்டத் தலைவர் வி.ஆர். ஈஸ்வரன் தலைமையில் கோபால்சாமி பெருமாள், துணைத் தலைவர் கதிரேசன், திருப்பூர் மகிலா, காங்கிரஸ் தலைவி ஆஷா, ஜெயின் லாபுதீன், நாகராஜ் சாந்தி குருவம்மா
மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.