மதுரை ஜூலை 29 –
மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2026-ம் ஆண்டிற்கான சட்டப்பேரவை அவைக் குழுத் தலைவர் இ. பரந்தாமன் (எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர்) மதுரை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டடத்தை ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், குழு உறுப்பினர்களாகிய பெ.சு.தி. சரவணன் (கலசபாக்கம்), க. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), நிவேதா எம். முருகள் (பூம்புகார்), கே. பொன்னுசாமி (சேந்தமங்கலம் (தனி), செ. முருகேசன் (பரமக்குடி (தனி), பெ. ராமலிங்கம் (நாமக்கல்), மா. செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி (தனி), T.M. தமிழ் செல்வம் (ஊத்தங்கரை (தனி), அ. நல்லதம்பி (கங்கவல்லி), அ. பண்ணாரி (பவானிசாகர்), M. ராஜமுத்து (வீரபாண்டி), பொன். ஜெயசீலன் (கூடலூர்), S. ராஜகுமார் (மயிலாடுதுறை), வி.வி. இராஜன்செல்லப்பா (திருப்பரங்குன்றம்) ஆகியோர் உடன் உள்ளனர்.