திருப்பூர், செப். 26:
தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் தலைவர் மு.அப்பாவு தாராபுரம் தெற்கு ஒன்றியம் சின்னபுத்தூர் ஊராட்சிப் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி முன்னாள் மேயருமான வழக்கறிஞர் ரெ.மகேஷ், தாராபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் S.A.K.சித்திக், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், இராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மி.ஜோசப் பெல்சி, மாவட்ட திமுக பிரதிநிதி சமூகை எஸ்.முரளி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



