தக்கலை, ஆக. 8 –
தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சம்பவ தினம் தனது வீட்டின் மொட்டை மாடிக்கு துணி காய போட சென்றார். அங்கு துணி காய போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (45) என்ற கொத்தனார் மொட்டை மாடியில் பதுங்கி இருந்தார். இதை அந்த பெண் கவனிக்கவில்லை. மகேஷ் திடீரென பின்னால் சென்று மகேஸ்வரியை பிடித்து கீழே தள்ளி அவரிடம் ஆபாசமாக அத்துமீறினார். மகேஷ் பிடியிலிருந்து தப்ப ராகினி அலறினார்.
அப்போது ஆபாசமாக பேசிய மகேஷ் கையில் வைத்திருந்த பைக் சாவியால் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினார். இதில் அவரது முகம் உட்பட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே மகேஷ் கொலை மிரட்டல் கொடுத்து விட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து அந்தப் பெண் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.