சுசீந்திரம், ஜூலை 30 –
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வெளிநாட்டவர்களும் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த கோவிலில் பக்தர்களுக்கு வசதியாக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஏற்பாடுகள் சரியாக நடைபெறுகின்றதா என்பது குறித்தும் வருகின்ற பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் எப்படி உள்ளது கோவிலில் உள்ள சிசிடி கேமராக்கள் சரியாக இயங்குகின்றனவா என்பன குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் மற்றும் இங்கு உள்ள பேரூராட்சி அலுவலர்கள் மின்சார துறையினர் உணவு பாதுகாப்பு துறையினர் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட துறையில் உள்ள அரசு அதிகாரிகள் இன்று காலை சுசீந்திரம் கோவிலுக்கு வருகை புரிந்து கோவில் உட்பிரகாரம் உள்ள உணவு சமையல் அறை மின்சாரம் சம்பந்தப்பட்டவைகள் சிசிடி கேமராக்கள் திடீரென தீப்பிடிப்பதற்கு ஏதாவது வாய்ப்புகள் இருக்கின்றதா அப்படி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தடுப்பதற்கு போதிய வசதிகள் உள்ளன என்பது குறித்தும் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வதற்கு போதிய வசதிகள் உள்ளனவா என்பன குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, இணை ஆணையர் உதவியாளர் வெங்கடேஷ், கோவில் மேலாளர் ஜெயசுதா, சுசீந்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் பிரகாஷ், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உடன் இருந்தனர்.


