பரமக்குடி, செப். 8 –
பரமக்குடியில் மாவட்ட இளைஞரணி சார்பில் 15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் பரமக்குடி அமைந்துள்ளது. பரமக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரமக்குடி வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சோமநாதபுரம் என்ற இடத்தில் திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் 15 லட்சம் மதிப்பீட்டில் ஆயிரம் சதுர அடியில் சுமார் 3 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெறும் வகையில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜா தலைமையில் வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போட்டி தேர்வுக்கு தயாராபவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண். சம்பத், வடக்கு நகர் செயலாளர் ஜீவரெத்தினம், தெற்கு நகர் இளைஞரணி அமைப்பாளர் துரைமுருகன், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



